புதிய களனி பாலம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு உயர் பாதுகாப்பு
தொடர் திருட்டு சம்பவங்களின் பின்னர் களனி பாலம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புதிய களனி பாலம், கட்டுநாயக்க, மத்திய மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் உபகரணங்களை அகற்றியமையினால் ஏற்பட்ட இழப்புகளின் பெறுமதி 275 மில்லியன் ரூபாய்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை மற்றும் புதிய களனி பாலம்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கேபிள் அமைப்பில் ஏற்பட்டுள்ள சேதத்தின் விளைவாக அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள 13 கிலோமீற்றர் நீளத்திற்கு மின் விளக்குகளை வழங்க முடியவில்லை.
அத்துடன் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் புதிய களனி பாலத்திற்கு ஏற்பட்ட சேதம் முறையே 250 மில்லியன் மற்றும் 25 மில்லியன் ரூபாய்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு பெரும்பாலோர் அந்தந்தப் பகுதிகளைச் சுற்றி வசிப்பவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் சந்தேக நபர்களில் சிலரைக் கைது செய்துள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |