புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு 5 பேரின் பெயர்கள் பரிந்துரை
புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்க வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவிருந்த நிலையில் அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
உறுதியான தீர்மானம்
இந்த நிலையில், அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.