விவசாயிகளுக்கான உரமானியம் தொடர்பில் வெளியான தகவல்
விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 25,000 உர மானியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான தீர்வினை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathne) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை விவசாய அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கான உரமானி
இந்த நிலையில், உர மானியத்திற்கான முதற்கட்ட பணம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்போது, 678.06 மில்லியன் ரூபாய் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 15, 000 ரூபாயும், 2ம் கட்டமாக 10, 000 ரூபாவும் மொத்தமாக 25000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்ட்டிருந்தது.
இதனடிப்படையில், கடந்த மாதம் நாட்டின் 11 மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு உரமானியத்துக்கான 60 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |