அங்கவீனமானவர்களுக்கு அறிமுகமாகும் அடையாள அட்டை
Disabilities
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Fathima
இலங்கையில் உள்ள அங்கவீனமானவர்களுக்கு வசதியாக வசதியாக வாக்களிக்கும் வகையில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னோடி வேலைத்திட்டமானது 10 மாவட்டங்களில் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
விசேட அடையாள அட்டை
அங்கவீன சமூகத்தினருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை குறித்த அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டத்தை முழு இலங்கையிலும் வழங்குவதன் இயலுமை தொடர்பில் கண்டறியுமாறு பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.