மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்: 4 அரசியல்வாதிகள் பெயர் முன்மொழிவு!

Sri Lanka Politician Sri Lanka
By Nafeel May 11, 2023 02:14 AM GMT
Nafeel

Nafeel

வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான ஆளுநர்கள் தங்களின் பதவிலிருந்து விலகுமாறு அரசாங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விலகியதும் புதிய ஆளுநர்கள் நான்கு பேரை நியமிப்பதற்கு ஐவரின் பெயர்கள் இதுவரை முன்மொழியப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட பெயர்களில் 4 பேர் அரசியல்வாதிகள், ஒருவர் அதிகாரி. நான்கு அரசியல்வாதிகளுள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க, தயா கமகே ஆகியோரின் பெயர்கள் அடங்குகின்றன.

பிரித்தானியாவில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாடு திரும்பியதும் புதிய ஆளுநர்களின் நியமனம் இடம்பெறும் என்று கடந்த வாரம் அரச தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த வாரம் திங்கட்கிழமை (08-05-2023) ஜனாதிபதி ரணில் நாடு திரும்பினார். இருப்பினும், புதிய ஆளுநர்கள் நியமனம் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.  

Gallery