அக்டோபரில் ஜனாதிபதி அனுரகுமார என வர்த்தமானி
எதிர்வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என அறிவித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படலாம் என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் ஒன்றில் உரையாற்றிய போதே கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவடையும்.
இதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒக்டோபர் மாதம் 5 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அந்த தேர்தலில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்க நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.