கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி இடையிலான புதிய படகு சேவை

Trincomalee Sri Lankan Peoples Arun Hemachandra
By Dilakshan Oct 27, 2025 02:37 PM GMT
Dilakshan

Dilakshan

கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி இடையிலான புதிய படகு சேவை இன்று (27) உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்

பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்

இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்பாடு

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் வசதிக்காக ரூ. 75 மில்லியன் செலவில் இந்த தற்காலிகப் படகு சேவை இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி இடையிலான புதிய படகு சேவை | New Ferry Service Kinniya And Kurinchakerny

2021ஆம் ஆண்டு ஏற்பட்ட படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இம்முறை சொகுசு இயந்திரப் படகு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய பாலம் 

இதேவேளை, புதிய பாலம் அமைப்பதற்காக ரூ. 1200 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நிர்மாணப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி இடையிலான புதிய படகு சேவை | New Ferry Service Kinniya And Kurinchakerny

நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீம், கிண்ணியா பிரதேச அமைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா நகர சபை தவிசாளர் உடன் கஜேந்திர குமார் எம்.பி சந்திப்பு

கிண்ணியா நகர சபை தவிசாளர் உடன் கஜேந்திர குமார் எம்.பி சந்திப்பு

GalleryGalleryGallery

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW