யாழில் திறந்து வைக்கப்பட்ட புதிய தேர்தல்கள் திணைக்கள அலுவலகம்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Election
By Fathima Sep 03, 2023 06:22 AM GMT
Fathima

Fathima

யாழ்ப்பாணத்தில் புதிதாக தேர்தல்கள் திணைக்கள அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட யாழ்ப்பாண தேர்தல்கள் திணைக்கள அலுவலகம் இன்று (03.09.2023) காலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 அலுவலக திறப்பு விழா

யாழில் திறந்து வைக்கப்பட்ட புதிய தேர்தல்கள் திணைக்கள அலுவலகம் | New Elections Department Office Jaffna

யாழ்ப்பாண உதவித் தேர்தல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர் புதிய கட்டிடத்திற்கான பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து  கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள்  மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும்  யாழ் மாவட்டச் செயலகத்திற்கு இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்கள பணிகள் இனிமேல் யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்திலேயே முன்னெடுக்கப்படவுள்ளது.


GalleryGalleryGalleryGalleryGallery