புதிய கல்வி முறைமை தொடர்பில் கல்வியமைச்சரின் அறிவிப்பு

Ministry of Education Education
By Mayuri Jul 02, 2024 08:00 AM GMT
Mayuri

Mayuri

பாடசாலை பருவத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும், பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

மாற்றமடையும் புதிய கல்வி முறையின் மூலம், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்கால வாழ்க்கையைத் தெரிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களைக் கொண்ட பிரஜையை உருவாக்குவது கல்வியின் அடிப்படை நோக்கம்.

புதிய கல்வி முறைமை தொடர்பில் கல்வியமைச்சரின் அறிவிப்பு | New Education System Education Ministry

தொடங்கப்பட்ட திட்டம்

முன்பள்ளிக் கல்வியில் இருந்தே திறன்கள் மற்றும் மனப்பான்மைகளை வளர்ப்பதற்குத் தேவையான அடித்தளத்தைத் தயாரிப்பது அவசியம்.

அதற்காக யுனெஸ்கோ, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் பிற அறிஞர்களின் ஒத்துழைப்புடன் ஒரு திட்டம் தொடங்கப்பட்டது.

எதிர்காலத்தில் பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW