அநுரவால் மாறிய இலங்கை அரசியலின் புதிய பரிமாணம்!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பெறுபேறுகளைப் பார்க்கும் போது இலங்கையில் பல பழைய அரசியல் முகங்கள் மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு மாகாணத்தை எடுத்துப் பார்த்தால் பல ஆண்டுகால அரசியல்வாதிகள் கூட இன்று நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னதாக ஜேவிபி என்று அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) வெறுமனே 3 ஆசனங்களிலே இருந்து இன்று 159 ஆசனங்களை பெற்று நாடாளுமன்றத்திலே வந்துள்ளார்கள்.
பாடங்கற்று வந்த தேசிய மக்கள் சக்தி
இதே 2020ஆம் ஆண்டு 145 ஆசனங்களை பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வெறும் 3 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பவர்கள் அனுபவம் இல்லாதவர்களாக இருக்கலாம்.
ஆனால், ஏற்கனவே முன்னைய அரசியல்வாதிகளால் பல பாடங்களை கற்று வந்தவர்களாகவே உள்ளனர்.
ஆகவே, இவர்களால் நாடு வங்குரோத்து நிலையை அடையாது என்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.ரி. குருசுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |