இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்
இலங்கை இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும்(Lasantha Rodrigo), கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவும்(Kanchana Banagoda) நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பதவி நியமனமானது இன்று(30) பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தனது கடமைகளில் இருந்து நாளை(31) ஓய்வு பெறுகின்றமையினாலே, இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவிப்பொறுப்பு ஏற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமிக்க இராணுவ அதிகாரி
மேலும், ஒரு அனுபவமிக்க இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொட்ரிகோ, முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பணியாற்றியதுடன் இதற்கு முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, இலங்கை கடற்படையின் புதிய தளபதியான ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட, ஆகஸ்ட் 2024 முதல் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையில் பல்வேறு விரைவுத் தாக்குதல், கப்பல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையிடும் தகுதியையும் பெற்றுள்ளார்.
அவர் வகித்த வேறு சில நியமனங்களில்; கடற்படைப் பயிற்சி இயக்குநர், தென்கிழக்கு கடற்படைத் தளபதி, வட மத்திய கடற்படைப் பகுதியின் கட்டளைத் தளபதி மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
துணிச்சலான சேவை
இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் கிழக்கு கடற்படைத் தளபதியாக கடமைகளை ஆற்றிவந்தார்.
இந்த நிலையில் தாய்நாட்டிற்கு ஆற்றிய உன்னத சேவையை கௌரவிக்கும் வகையில், ரியர் அட்மிரல் பனாகொடவின் துணிச்சலுக்காக ரண சூர பதக்கமும் வழங்கப்பட்டதுடன் இவருக்கு உத்தம சேவா பதக்கமா (USP) என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |