அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய மாற்றம்
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த திட்டத்திற்கான பயனாளியாக தகைமை பெற்றவர்கள் சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடி காலம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கால எல்லை நீடிப்பு
அதேநேரம் பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ளவர்கள் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் செல்லுபடி காலம் ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சமூகப் பிரிவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ள பிரிவு போன்ற இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து 80,000 குடும்பங்களுக்காக ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்கப்படும் 5000 ரூபா தொகையை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை செலுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பங்கள் கோரலை 2024 முதலாம் காலாண்டில் ஆரம்பித்து 2024 ஜுன் மாதத்தில் நிறைவு செய்து ஜுலை மாதம் தொடக்கம் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம், அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500 ரூபாயும் இயலாமையுள்ள நபர்களுக்கு 7,500 ரூபாயும் முதியோர்களுக்கு 3,000 ரூபாயும் 2024 ஏப்ரல் மாதம் முதல் மாதாந்தக் கொடுப்பனவாக செலுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.