பண்டாரநாயக்க விமான நிலையத்தில் புதிய சோதனைக் கருவி
Bandaranaike International Airport
Sri Lanka Airport
By Fathima
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் தன்னியக்க முக அடையாள கண்காணிப்பு அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய பயணிகளை அடையாளம் காணும் நோக்கில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாள கண்காணிப்பு நிறுவப்பட்டுள்ளது.
