கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை ஆரம்பம்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தானது கொழும்பு – கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம், விமான நிறுவனம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் தனியார் பேருந்து நிறுவனம் இணைந்து இந்த பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.
பேருந்து சேவை
சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமானப் பயணிகளின் வசதிக்காக இந்தப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இதற்காக 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு பயணிக்கு ஒரு பயணத்திற்கு 3,000 ரூபாய் கட்டணம் அறவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |