தமிழ் பொது வேட்பாளர் உட்பட சில வேட்பாளர்களின் சின்னங்கள்

P Ariyanethran Ranil Wickremesinghe Sarath Fonseka
By Mayuri Aug 15, 2024 10:19 AM GMT

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட 39 வேட்பாளர்கள் இந்த ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ் பொது வேட்பாளர் உட்பட சில வேட்பாளர்களின் சின்னங்கள் | Symbols Of Candidates

சரத் பொன்சேகா, அரியநேத்திரன்

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 'லந்தர்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற ப.அரியநேத்திரனுக்கு 'சங்கு' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.   

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW