முன்பள்ளி குழந்தைகளுக்கு புதிய பிஸ்கட்!

Sri Lanka
By Nafeel May 07, 2023 03:26 PM GMT
Nafeel

Nafeel

சிறு குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் முன்பள்ளிச் சிறார்களுக்கு உயர் போஷாக்குடன் கூடிய பிஸ்கட் வகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த மாதம் முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

"முன்பள்ளிக் குழந்தைகளுக்கு உயர் ஊட்டச் சத்து பிஸ்கட் வழங்கும் திட்டமொன்றை புதிதாக ஆரம்பித்துள்ளோம். அதற்கான அனைத்தையும் தயார் செய்து அடுத்த மாதத்துக்குள் விநியோகம் செய்வோம். மேலும், குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்தான உணவுகளை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.