சாய்ந்தமருது பிரதேசத்தில் தொற்றா நோய்ப் பரிசோதனை முன்னெடுப்பு
சாய்ந்தமருது(Sainthamaruthu) பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கான தொற்றா நோய்ப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை நடவடிக்கையானது நேற்று(4) சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.
பரிசோதனைகள்
இதன்போது 153க்கு மேற்பட்டவர்களுக்கு குருதிச் சீனி பரிசோதனை (Random Sugar Test) மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









