நாட்டில் களமிறக்கப்பட உள்ள நூற்றுக்கணக்கான சிறப்பு அதிரடிப் படையினர்
நாட்டில் 500 சிறப்பு அதிரடிப் படையினர் களமிறங்கப் போகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால(Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெறும் சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்கும் இந்த அதிரடிப் படையினர் களமிறங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சிறப்பு படையினர்
அவர் மேலும் தெரிவிக்கையில் , தெற்கில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த 4 பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளோம்.
மேலும் அவ்வாறான விடயங்களைத் தவிர்க்கவே புதிய சிறப்பு அதிரடிப் படையினர் களமிறங்கப் போகின்றனர்.
புதிய சிறப்பு படையினர் தங்களது பயிற்சிகளை விரைவில் முடித்துவிட்டு தங்களது பணிகளுக்குத் திரும்புவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |