குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல்
குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது 2017 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.
[DLD1PTE ]
கண்காணிப்பு பொறிமுறை
இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் ஒரே மாதிரியான செயற்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்து முறையான பதிவு மற்றும் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு மாகாணத்திலும் சிறுவர் பராமரிப்பு சேவையை ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தவும், முறையான ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்யவும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |