மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கணக்காய்வுகளை நடத்த திட்டம்! தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிவிப்பு
2026ஆம் ஆண்டில், தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் மொத்தம் 3,508 கணக்காய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொது நிதிக் குழுவின் கூட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பணித் திட்டம்
இதேவேளை 2026 வருடாந்த பணித் திட்டத்தின்படி, இந்த அலுவலகம் 3,484 நிதி கணக்காய்வுகள், 12 சிறப்புக் கணக்காய்வுகள், 11 செயல்திறன் கணக்காய்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் கணக்காய்வுகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கி சங்கங்களின் கணக்காய்வுகளும் 2026 முதல் கணக்காய்வாளர் நாயகத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.