இலங்கையில் செவ்வாய் கிரக படிமங்கள் - ஆய்வு செய்யும் நாசா
Southern Province
NASA
By Vethu
இலங்கையில் செவ்வாய் கிரகத்திலுள்ள கற்கள் போன்ற படிமங்கள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாசாவின் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றும் இலங்கையரான சுனிதி கருணாதிலகே தலைமையில் ஆய்வுகள் செய்யப்படவுள்ளன.
இதற்கான சிறப்பு நிபுணர்கள் குழுவே நாட்டுக்கு வரவுள்ளது. கினிகலபெலஸ்ஸ மற்றும் இண்டிகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை முதலில் மேற்கொள்ளவுள்ளனர்.
பின்னர் நாட்டின் தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பகுதிக்கு பயணிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் புவியியல் அம்சங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை உருவாக்குவதைக் காட்டுவதாக சுனிதி கருணாதிலக்க குறிப்பிட்ட்டுள்ளார்.