ஜனாதிபதியின் செயலாளருக்கும் கொழும்பு போர்ட் சிட்டி நிறுவனத்திற்கும் இடையில் கலந்துரையாடல்
போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சியோங் ஹொங்பெங் (xiong Hongfeng) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், எதிர்கால பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான புதிய திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நன்கொடை
அத்தோடு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தினால் மூன்று மில்லியன் ரூபா நன்கொடையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ,இந்த சந்திப்பில் போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் சியன் நன்னும் (Xian Nan(Neo) கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |