இலங்கைக்கான பயணத் தடை குறித்து அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட அறிவிப்பு

Gampaha Sri Lanka United States of America Julie Chung Tourism
By Laksi Oct 28, 2024 12:49 PM GMT
Laksi

Laksi

அமெரிக்க பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று (28) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் 8 வீடுகளை உடைத்து தங்க நகைகள் திருட்டு

மட்டக்களப்பில் 8 வீடுகளை உடைத்து தங்க நகைகள் திருட்டு

பயண ஆலோசனை 

அவர் மேலும் தெரிவிக்கையில், அறுகம்பை பகுதியில் குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காணப்படுவதாக தகவல் கிடைத்த சந்தர்ப்பத்தில் அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்தோம். அதற்கு அவர்கள் விரைவாக பதிலளித்தனர்.

இலங்கைக்கான பயணத் தடை குறித்து அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட அறிவிப்பு | Arugam Bay Issue Julie Chung Explanation

தொடர்ச்சியாக அன்றாடம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தலைமைத்துவத்துடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.

எவ்வாறெனினும், இலங்கைக்கான பயண ஆலோசனை தொடர்பான சில பிழையான தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW