பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 78 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, இதுவரையான காலப்பகுதியில் 869 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 265 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 604 முறைப்பாடுகளும், 16 ஏனைய முறைப்பாடுகளும், வன்முறை சம்பவம் தொடர்பில் 1 முறைப்பாடும் பதிவாகியுள்ளது.
முறைப்பாடுகள் அதிகரிப்பு
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், வன்முறைச் சம்பவங்கள் 8 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 723 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 146 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |