பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் நாமலின் உறுதியான அறிவிப்பு

Mahinda Rajapaksa Namal Rajapaksa Ranil Wickremesinghe
By Mayuri Aug 22, 2024 04:29 AM GMT
Mayuri

Mayuri

தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது, முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று அநுராதபுரம் நகரில் நடைபெற்றது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசியல் வரைபடத்தை மாற்றிய பொதுஜன பெரமுன

அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து குறுகிய காலத்தில் நாட்டை பல்வேறு துறைகளில் முன்னேற்றினார்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் நாமலின் உறுதியான அறிவிப்பு | Namal Rajapaksha Statement About Election

2015ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாட்டை கையளித்தோம். 2019ஆம் ஆண்டு பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த நாட்டையே கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்றார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கொவிட் பெருந்தொற்றுத் தாக்கத்துக்கும் முகங்கொடுக்க நேரிட்டது.

பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா என்ற தீர்மானமிக்க கேள்வி எழுந்த போது மக்களின் உயிரையே பாதுகாத்தோம். பொருளாதாரப் பாதிப்பை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் எமது அரசை வீழ்த்தினார்கள். அரசு வீழ்ச்சியடைந்தாலும் நாட்டை வீழ்ச்சியடைய செய்யவில்லை.

நிபந்தனையற்ற ஆதரவு

இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்கவிடம் அரசைக் கையளித்து நிலைமைகளைச் சீர்செய்வதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினோம். நாட்டின் தேசியத்துக்கும், இராணுவத்தினருக்கும் எதிரான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் நாமலின் உறுதியான அறிவிப்பு | Namal Rajapaksha Statement About Election

மேலும் இலங்கை ஒற்றையாட்சி நாடு. நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே படை வீரர்கள் போரிட்டார்கள். நாங்கள் அரசியலில் இருக்கும் வரை இந்த நாட்டில் எல்லைக் கிராமங்கள் தோற்றம் பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை.

இந்தப் பௌத்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை மற்றும் கௌரவமளிக்கத் தயார். அதனைச் செய்வோம். அதேபோல் மாகாண சபைக்குள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW