நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Disaster Cyclone Ditwah
By Fathima Dec 17, 2025 01:45 PM GMT
Fathima

Fathima

ஜனாதிபதியின் இயலாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய நாமல் ராஜக்ஷவுக்கு எதிராக அரசாங்க கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில் ஏற்பட்ட பதற்றம் இளைஞனிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தீர்க்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க சென்ற நாமல் எம்.பி அந்த மக்களிடம் தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டுள்ளார்.

வாக்குவாதம்

அச்சந்தர்ப்பத்தில் மக்கள், தங்களுக்கு காணி வழங்கப்படவில்லை, பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அப்போது உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுக்கக் கூடியவர்.

அவரே இதை செய்ய வேண்டும்.அவரின் இயலாமையே இதற்கு காரணம் என தெரிவித்தார். அதை கேட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறிய நிலையிலேயே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் நாமல் ராஜபக்ஷ, குறித்த இளைஞரிடம் விபரங்களை தெளிவுபடுத்தியதையடுத்து பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.