நாமல் தமிழ் இனத்தின் எதிரியாம்..! இப்படி கூறும் அர்ச்சுனா
எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் வலிகளை புரிந்து கொண்டு உண்மையாக தமிழர்கள் சார்பில் நின்று இனப்பிரச்சினையை தீர்க்கும் ஒரு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமராக நான் இருப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்படி ஒரு அரசாங்கம் வரப்போவது இல்லை எனவும், அப்படி நிகழவேண்டும் என்பதே எனது அவா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு சார்பாக
மேலும் கருத்து தெரிவித்த அவர், ''நாமல் தான் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என கூறுகிறார்கள். நாமலுடன் நான் இணைந்துவிட்டதாக சில கருத்துக்களும் பரவி வருகின்றனர்.
நாமல் எமது இனத்தின் எதிரி, அவருடைய அரசியல் தமிழர்களுக்கு சார்பாக இருக்காது.
அவ்வாறு நான் அவருடன் இணைந்தால் அது நான் எனது இனத்துக்கும் எனது தந்தைக்கும் செய்யும் மிக பெரிய துரோகம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |