டலஸுக்கு நாமல் மீண்டும் அழைப்பு
Dullas Alahapperuma
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Rakesh
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எமது முகாமில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர். அவருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு மீண்டும் முயற்சிப்போம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இடதுசாரி பொருளாதார சிந்தனை கொண்டவர்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டலஸ் அழகப்பெரும எமது முகாமில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர். அவருடன் பேச்சு நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரலாம் என நம்புகின்றேன். இது எனது கருத்தே தவிர கட்சியின் கருத்து அல்ல.

2005 இல் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற டலஸ் அழகப்பெரும பெரும் பாடுபட்டார். அவர் எம்மைப் போல் இடதுசாரி பொருளாதார சிந்தனை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |