யாழில் திருவிழா சென்றவர்கள் வீட்டில் நகைகள் திருட்டு

Sri Lanka Police Jaffna Nallur Kandaswamy Kovil Crime
By Rakesh Sep 13, 2023 01:07 PM GMT
Rakesh

Rakesh

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் 53 பவுண் நகை மற்றும் 100 அமெரிக்கன் டொலர் என்பன திருடப்பட்டுள்ளன.

வீட்டில் வசித்தோர் நேற்று நல்லூர் கோயில் சப்பரத் திருவிழாவுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வேளை வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டுள்ளன என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை

யாழில் திருவிழா சென்றவர்கள் வீட்டில் நகைகள் திருட்டு | Nallur Kandaswamy Temple Festival 2023

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.