முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்

United National Party Ranil Wickremesinghe Death
By Farook Sihan Aug 26, 2023 08:24 AM GMT
Farook Sihan

Farook Sihan

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்.

கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (26.08.2023) அதிகாலை அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதியில் கட்சியின் புனரமைப்பு பணிக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார் | Myown Musthafa

கட்சியை பலப்படுத்துதல்

மேலும், கட்சியை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஆதரவு கோரும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.