பொலிஸ் நிலையத்தில் மாயமான ஆட்டிறைச்சி: பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

Sri Lanka Police Ampara Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 28, 2024 10:42 PM GMT
Harrish

Harrish

அம்பாறை -அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் மாயமான  சம்பத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(26) அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைத்து ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்பின்னர், குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆடுகளை தனது வீட்டு நிகழ்வு ஒன்றிக்கு அறுத்திருந்தாகவும் குற்றத்தினை ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் மாயமான ஆட்டிறைச்சி: பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Mutton Missing At The Police Station

அத்துடன், இந்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு சான்றுப் பொருளை நீதிவான் பார்வையிட சென்ற வேளையில் ஆட்டிறைச்சி மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

எனினும், சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிஸார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தியுள்ளது.

யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான் பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு பணிப்புரை விடுத்தபோது குறித்த ஆட்டின் பின்னங்கால்கள் மற்றும் சதைகள் யாவும் மாயமாகியுள்ளன.

மேற்கொள்ளப்பட்ட விசாரணை

இது பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆட்டிறைச்சியின் சில பகுதிகளை தேடுதலுக்குச் சென்ற பொலிஸார் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை(26) விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் மாயமான ஆட்டிறைச்சி: பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை | Mutton Missing At The Police Station

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு எதிராக அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை மேற்கொண்டு அதனடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கும் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும் ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவூருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery