கொட்டும் கனமழையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முத்து நகர் விவசாயிகள்
திருகோணமலை- முத்து நகர் விவசாயிகள் கொட்டும் கனமழையிலும் இன்றும்(24.10.2025) 38 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழை காரணமாக மழையில் நனைந்து குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம் சூரிய மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை அடுத்து அதனை மீள பெற்றுத்தரக்கோரி சத்தியாக் கிரகப் போராட்டத்தை தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்னெடுத்திருந்தனர்.
தொடர் போராட்டம்
இது தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில், "மழை காலங்களில் நனைந்து போராடுவதை நடப்பு கால அரசாங்கம் இரசிக்கிறதா? எங்களுக்கான தீர்வை இப்படி தான் தருவோம் என்பதை எழுத்து மூலமாக அறிவித்தால் என்ன, இதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவ்வளவு அதிகாரிகளுக்குள்ளும் சொல்லப்படும் விடயங்கள் சாத்தியமில்லை, நம்பியே இங்கு மழையில் நனைந்து தீர்வு கேட்கிறோம்.எமது கஷ்டத்தை உணருங்கள்." என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நிலையில் கைக் குழந்தையுடன் பெற்றோர்கள் வறுமையில் வாடுகின்றனர். அரசியலுக்காக அல்ல விவசாய பட்டியலை உரிய திணைக்களத்தில் பெற்று தீர்வினை பெற்றுத்தருவீர்கள் என காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |