முஸ்லிம் தாதியரின் ஆடை விவகாரம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Sri Lanka NPP Government
By Faarika Faizal Oct 24, 2025 09:20 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரம் மற்றும் மத மறப்புகளைப் பேணும் வகையில் உடைகளை அணிவதில் எதிர்நோக்கும் சவால்கள், கொவிட் - 19 காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் காரணமாக தொடர்ந்தும் ஜனாஸாக்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

றிஷாட் பதியுதீன் முயற்சியால், 8 கோடி ரூபாய் நிதியில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம்

றிஷாட் பதியுதீன் முயற்சியால், 8 கோடி ரூபாய் நிதியில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம்

சட்டத் தடை 

இந்த நிலையில், முஸ்லிம் தாதியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்குள் தமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதில் எந்தவித சட்டத் தடை இல்லையென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தாதியரின் ஆடை விவகாரம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | Muslim Nurses Clothing Issue

அதேநேரம், ஜனாஸாக்கள் தொடர்பில் கொவிட் - 19 காலத்துக்கு முன்பிருந்த விதிமுறைகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


You May Like This Video...


கல்முனை பள்ளிவாசல்களின் உதவியை கோரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

கல்முனை பள்ளிவாசல்களின் உதவியை கோரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW