முஸ்லிம்கள் அவுரங்கசீப்பை மன்னராக ஏற்க மாட்டார்கள் - பட்னாவிஸ்
Narendra Modi
India
By Fathima
தேசத்தின் மீது பற்று கொண்ட முஸ்லிம்கள் எவரும் அவுரங்கசிப்பை மன்னராக ஏற்க மாட்டார்கள் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மோடி அரசின் 9 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், முகலாய மன்னர் வழிவந்தவர்கள் யாரும் இந்தியாவில் இப்போது இல்லை. போர் தொடுத்து ஆட்சி புரிந்தவர்களை இங்குள்ள முஸ்லிம்கள், தங்களது மன்னர்களாக ஒரு போதும் கருதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசத்தின் மீது பற்று கொண்ட முஸ்லிம்கள், சத்ரபதி சிவாஜியை மட்டுமே மன்னராக ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.