முஸ்லிம் தாதியர்களின் ஆடை குறித்த அமைச்சரின் கூற்று : வெளியான ஆட்சேபம்
முஸ்லிம் தாதியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதில் எந்தவித சட்டத் தடை இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அனுமதித்ததை இலங்கை தாதியர்கள் சங்கம் ஆட்சேபித்துள்ளது.
அமைச்சரின் கூற்று தவறானது என்றும், தாதியர்கள் சீருடைகளில் அத்தகைய மாற்றத்தை அனுமதிக்கும் அதிகாரபூர்வ சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், சங்கத்தின் தலைவர் W.A. கீர்த்திரத்ன கூறியுள்ளார்.
மேலும், சமீபத்தில் பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடன் நடந்த சந்திப்பின் போது, முஸ்லிம் தாதியர்கள் மத உடைக் குறியீடுகளைக் கடைப்பிடிப்பதற்கு எந்த சட்டத் தடைகளும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.
தாதியர் ஆடை, கலாசார ஆடை அல்ல
எனினும் அமைச்சரின் அறிக்கை சுகாதாரத் துறைக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இலங்கை தாதியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் காலத்திற்கு முந்திய தாதியர்கள் சீருடை, தொழில்முறையின் உலகளாவிய சின்னமாகும்,
அது, குறித்த கலாசார அல்லது மத பிரதிநிதித்துவத்தின் அடையாளம் அல்ல என்று கீர்த்திரத்ன வலியுறுத்தினார்.
மேலும், சுகாதார அமைச்சின் சீருடை குழு மற்றும் இலங்கை தாதியர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உடையாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |