மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மஹரகம அரபு மொழிக் கல்லூரி
மஹரகம பகுதியில் அமைந்துள்ள அரபு மொழிக் கல்லூரியை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அரபுக் கல்லூரி நேற்றையதினம்(25.10.2025) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என்.டி.எச். அப்துல் கஃபூர் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
மஹரகம, பமுனுவ வீதியில் அமைந்துள்ள இந்த அரபுக் கல்லூரி கடந்த காலங்களில் இயங்குவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் கல்லூரியின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து என்.டி.எச். அப்துல் கஃபூர் அறக்கட்டளை மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்வின்போது, துபாயைச் சேர்ந்த ஷேக் வலீத் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஜுமாத்துன் அஸ்மி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





