கல்முனை மஹ்மூத் பாலிகாவில் இஸ்லாமிய புதுவருட தின முஹர்ரம் நிகழ்வு

Sri Lanka Eastern Province Kalmunai
By Rukshy Jul 14, 2024 04:33 AM GMT

இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமாக புனித முஹர்ரம் - 1446 புதுவருடத்தினை நினைவு ௯ரும் வகையில் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் சுற்று நிரூபத்துக்கு அமைவாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) "மகிழ்ச்சிகரமான முஹர்ரம்" எனும் தொனிப்பொருளில் முஹர்ரம் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கலாசார நிகழ்வுகள்

இந்நிகழ்வில் முஹர்ரம் நிகழ்வை ஞாபகப்படுத்தும் நல்லுபதேசங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளை இஸ்லாம் பாட ஆசிரியர் மௌலவி ஏ.ஜி. முகம்மது நதீரால் நிகழ்த்தப்பட்டன.

கல்முனை மஹ்மூத் பாலிகாவில் இஸ்லாமிய புதுவருட தின முஹர்ரம் நிகழ்வு | Muslim New Year Event

மேலும் இத்தினத்தில் எமது தாய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பொருளாதார முன்னேற்றம், சுபீட்சம், ஐக்கியம், சௌபாக்கியம் வேண்டி விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இதில் பிரதி அதிபர்களான ஹாஜியானி சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர்களான எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery