முஸ்லிம் - மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தனித்தனியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வைக்காண ஜனாதிபதி முதன்மை அளித்து வரும் நிலையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரிடம் இந்த விடயம் தொடர்பில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு அரசியலின் பேசுபொருள்
இதனை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதியின் செயலாளரும் ஜனாதிபதியிடம் இந்த விடயம் எடுத்துக்கூறப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இந்த வாரம் இந்த விடயத்தை சபைக்கு எடுத்துச் சென்று,நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க சவுதி அரேபியாவின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற மாற்று யோசனையை முன்வைத்தமை இன்று கொழும்பின் அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now |