பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணம் குறித்து ஆய்வறிக்கை
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணம் குறித்து ஆய்வறிக்கை எழுதி முஸ்லீம் பெண் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நஜ்மா பர்வீன் என்ற பெண்ணின் 'நரேந்திர மோடியின் அரசியல் தலைமை ஒரு பகுப்பாய்வு ஆய்வு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட படிப்பு, 2023 நவம்பர் முதலாம் திகதியன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையின் கீழ் நிறைவு பெற்றது.
இந்தநிலையில் பிரதமர் மோடி குறித்து ஆய்வு செய்த இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
பிரதமராக மோடி
அதேநேரம் அவரது ஆய்வறிக்கையின் வெளிப்புற ஆய்வாளர் புது டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஆய்வாளர் நஜ்மா பர்வீன், பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோரின் இழப்பை எதிர்கொண்டார். இந்த சவால்கள் இருந்தபோதிலும், விஷல் பாரத் சன்ஸ்தானின் நிறுவனர் பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா வழங்கிய நிதியுதவியின் ஆதரவுடன் அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக வளர்ச்சியின் மாதிரியை உருவாக்கியதால் தாம் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததாக ஆய்வாளர் நஜ்மா பர்வீன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராக மோடி சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி, நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் பல முடிவுகளை எடுத்தமை காரணமாகவும் தாம் அந்த தலைப்பை தேர்ந்தெடுத்ததாக பர்வீன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்து ஆய்வு செய்ய தனது முடிவு எதிர்ப்புகளை சந்தித்ததாகவும்
ஆனால் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.