காத்தான்குடி நகர சபை உள்ளிட்ட மூன்று சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது முஸ்லிம் காங்கிரஸ்
Srilanka Muslim Congress
Local government Election
M.L.A.M. Hizbullah
By Rakshana MA
காத்தான்குடி நகர சபை உள்ளிட மூன்று சபைகளில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
அதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை பற்று பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
கட்டுப்பணம்
அதற்கான கட்டுப்பணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |