ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் இடையில் சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு உலமா சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தலைமையிலான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அனர்த்த நிவாரணப் பணிகள்
இதன்போது, 100 வருட வரலாற்றைக் கொண்ட உலமா சபை முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் சமூக வலுவூட்டலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் குறித்தும் விரிவான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த நிவாரணப் பணிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் எம்.பி.எம். பைறூஸ், ஸ்தாபக போஷகர் என்.எம்.அமீன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
உலமா சபையின் கடந்த 3 வருட செயற்பாடுகள் அடங்கிய அறிக்கையும் இதன்போது முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

