தேசிய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்

Sri Lanka Sri Lanka Police Investigation
By Mayuri Jul 28, 2024 03:11 AM GMT
Mayuri

Mayuri

2023 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், 52 கொலைகள் துப்பாக்கிச்சூடுகளால் நடந்தவை. தங்காலை பொலிஸ் பிரிவில் அதிகளவான கொலைகள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 32 ஆகும்.

இதற்கிடையில், கடந்த ஆறு ஆண்டுகளை பார்க்கும் போது, 2023இல் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் உடைப்பு மற்றும் கொள்ளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ள சில குற்றங்கள்

2018ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு அந்த குற்றங்கள் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல் | Murders In Sri Lanka

இதற்கிடையில், பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களின் அறிக்கைகள் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் 27% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் 2023 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW