பெருமைமிகு வரலாற்றின் மௌனமான சாட்சியே நந்திக்கடல் : து.ரவிகரன் தெரிவிப்பு
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் தலைமையில் இன்று (18.05.2023) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பெருமைமிகு வரலாற்றின் இறுதிக் காட்சி
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த அஞ்சலி நிகழ்வுகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கரைதுறைப்பற்று தொகுதிக் கிளை செயலாளர் அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன், கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னைனால் உறுப்பினர் இ. ஜெகதீஸ்வரன் மூலக்கிளைகளின் பிரதிநிதிகளான ஜெறோம்சன், மிதுன் சமூக சேவகர் ஜொய்ஸ் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |