வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதி! சபையில் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான்
ஈஸ்டர் குண்டு தாக்குதல் ஒரு அரசியல் சதி என்றும் இதனால் வைத்தியர் ஷாபி போன்ற முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தோரே பாதிக்கப்பட்டனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18.11.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இழைக்கப்பட்ட அநீதி
அவர் மேலும் கூறுகையில், “வைத்தியர் ஷாபி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரி கடந்த வருடன் நவம்பர் மாதத்தில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நியாயத்தை பெற்றுத்தருவோம் என ஆசை வார்த்தைகளை கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது.
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா ஜெஸ்மினுக்கு எதிராக ஏன் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை.
ஈஸ்டர் குண்டு தாக்குதல் ஒரு அரசியல் சதி ஆகும். இதனால் வைத்தியர் ஷாபி போன்ற முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தோரே பாதிக்கப்பட்டனர்.
அத்துடன், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே முரண்பாட்டை தோற்றுவித்தனர்.'' என தெரிவித்துள்ளார்.