ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து ஜனாதிபதியிடம் முஜிபுர் ரஹ்மான் விடுத்த கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் முக்கிய பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி, தான் பதவியேற்ற ஒரு வருடத்தின் பின்னரே நாடாளுமன்றத்தில் அறிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்
தமது கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (26) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வெளியிடப்படாத அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளையும் உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பக்கங்களை கிழித்தவனே சூத்திரதாரி என்பதால், அந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்யுமாறும் ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.