முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்! கொடியேற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர்

By Fathima Nov 26, 2025 10:29 AM GMT
Fathima

Fathima

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் 204வது கொடியேற்று விழா நடைபெற்றுவருகின்றது.

இந்த விழாவில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

விழா ஏற்பாடுகள்

இந்த நிகழ்வில், விழா ஏற்பாடுகள் குறித்தும், மக்கள் பங்கேற்பு தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டதோடு விஷேட துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்! கொடியேற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் | Muhyiddin Juma Grand Mosque

விழாவின் பாரம்பரியமும், நாட்டில் கடற்கரைப் பள்ளிவாசலின் ஆன்மீக முக்கியத்துவம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது விஷேட அம்சமாக கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீட் ஒருங்கிணைப்பில் கடற்கரை வீதியில் (Marine Drive) தற்போது நிலவும் கடும் நெரிசல், போக்குவரத்து சிரமம் மற்றும் வீதியின் குறுகலால் ஏற்படும் இடையூறுகள் குறித்து பிரதியமைச்சருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் விரிவாகக் எடுத்துரைக்கப்பட்டது.

குறைபாடுகள்

இப்பகுதி மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கமாக மாறியிருக்கும் கடற்கரை வீதியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களின் பாதுகாப்பும், எளிதான போக்குவரத்தும் உறுதி செய்யும் வகையில் வீதி விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய அடிப்படை வசதிகள் மேம்படுத்தலின் அவசியம் குறித்து நம்பிக்கையாளர் சபையினால் வலியுறுத்தப்பட்டது.

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்! கொடியேற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் | Muhyiddin Juma Grand Mosque

இதற்கிணங்க கடற்கரை வீதி விரிவாக்கம் குறித்த முன்மொழிவு ஆவணம் நம்பிக்கையாளர் சபையினால் பிரதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத்தார்களும் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery