இலங்கை வங்கி தலைவருடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு!

Trincomalee Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples
By Fathima May 29, 2023 10:53 PM GMT
Fathima

Fathima

இலங்கை வங்கி தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேராவிற்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(29.05.2023) இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் இலங்கை வங்கி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.  

இதன்போது திருகோணமலை - தோப்பூர் இலங்கை வங்கி கிளையில் ATM இயந்திரம் நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவசர தேவையின் போது ATM இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு  சுமார் 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மூதூர் நகருக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்  செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

இலங்கை வங்கி தலைவருடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு! | Ms Taubeek Mp Meet Bank Of Sri Lanka Chairman

விரைவில் ATM இயந்திரம்

இதன் காரணமாக பிரதேச மக்களால் ATM இயந்திரம் ஒன்றினை நிறுவுமாறு கோரி கையொப்பம் இடப்பட்ட கோரிக்கை கடிதம் இலங்கை வங்கிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது தோப்பூர் இலங்கை வங்கி கிளையில்  ATM இயந்திரம் பொருத்துவதற்கு விரைவில் நடவடிக்கையை மேற்கொள்வதாக இலங்கை வங்கியின் தலைவர் உறுதியளித்ததாகவும் எம்.எஸ்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.