வேலையில்லா பட்டதாரிகளுக்கான தீர்வு : தாஹிர் எம்.பி வழங்கியுள்ள உறுதிமொழி
வேலையற்ற பட்டதாரிகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முஸ்தீபுகளையும் மேற்கொள்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிருக்குமிடையிலான சந்திப்பொன்று ஒலுவில் தனியார் வளாகம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இதன் போது பட்டதாரிகள், அரச தொழில் வாய்ப்பின்றி எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவ்வமைப்பினால் தெளிவுப்படுத்தப்பட்டது.
மேலும், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலான தகவல்கள், அரச தொழில் தொடர்பான தகவல்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான மாற்று தொழில் வழிகாட்டல்கள் தொடர்பிலும் முழுமையான தகவல்களை கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் இது தொடர்பில் பட்டதாரிகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முஸ்தீபுகளையும் தான் மேற்கொள்வதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |