முன்னாள் எம்.பி க்கு கடூழிய சிறைதண்டனை!

Sri Lanka Politician Sri Lanka Prisons in Sri Lanka Prison Court of Appeal of Sri Lanka
By Rakshana MA Nov 05, 2024 01:09 PM GMT
Rakshana MA

Rakshana MA

முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு(Shantha Premaratne) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பளிப்பதாக உறுதியளித்து 50,000 ரூபாவை 2017ஆம் ஆண்டு,  இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இத் தண்டனையை விதித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி சாந்த பிரேமரத்ன முன்வைத்த மேன்முறையீட்டை நிராகரித்த சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இன்றைய நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நீதிமன்ற தீர்ப்பு 

2007 டிசம்பர் 01ஆம் திகதிக்கும் 26ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் அம்பாறை ஜி. புஞ்சி நோனா என்ற பெண்ணின் மகனுக்கு, இலங்கை மின்சார சபையில் தொழில் வழங்குவதற்காக 50,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டி சாந்த பிரேமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது, பிரதிவாதி ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பணிபுரிந்ததோடு, அவர் ஒரு சட்டத்தரணியாகவும், தொழில் ரீதியாக பிரதி அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

முன்னாள் எம்.பி க்கு கடூழிய சிறைதண்டனை! | Mp Sentenced To Prison For Bribery Of 50 000

இது தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், 2017 நவம்பர் 2 ஆம் திகதி தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் குறித்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

இதன்படி, பிரதிவாதிக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்த உயர்நீதிமன்றம், மேற்படி அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்குவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கில் இளைஞர்களுக்கான விருதுப் போட்டிகள்

விளையாட்டு துறை அமைச்சினால் கிழக்கில் இளைஞர்களுக்கான விருதுப் போட்டிகள்

நிறுபிக்க தவறிய குற்றச்சாட்டு

குறித்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த சாந்த பிரேமரத்ன, உயர் நீதிமன்ற விசாரணையில் தமக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டானது சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் உயர் நீதிமன்ற நீதிபதியால் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் சாந்த பிரேமரத்ன தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் எம்.பி க்கு கடூழிய சிறைதண்டனை! | Mp Sentenced To Prison For Bribery Of 50 000 

இதன்படி, முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை சரியான முறையில் அறிவித்துள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்த தண்டனை மற்றும் அபராதம் உறுதி செய்யப்படுவதாகவும், அதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது!

ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW