நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

Sri Lanka Police Law and Order Ramanathan Archchuna
By Fathima Dec 24, 2025 08:32 AM GMT
Fathima

Fathima

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று பிற்பகல் கோட்டை பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவரை பிணையில் விடுவிக்க அனுமதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றையதினம்(24.12.2025) சரணடைந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு | Mp Archuna Surrenders To Police Today

குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.